பிரபல நடிகரான பிரசாந்த் ராதா பாரதி இயக்கத்தில் வெளியான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக திரையுலகில் அறிமுகமானார். இவரது தந்தை இயக்குனர் தியாகராஜன். டாப் ஸ்டார் பிரசாந்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் வின்னர், திருடா திருடா, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிரசாந்த் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான பல்வான் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, பிரசாந்த் டாக்டர் மகளை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தான் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றது தெரியவந்தது.

இது தெரியாமல் பிரசாந்த் அவரை திருமணம் செய்துள்ளார். மேலும் திருமணம் ஆன ஒன்றரை மாதத்தில் அந்த பெண் அவரது வீட்டிற்கு சென்று விட்டார். பிரசாந்தின் முதல் திருமணம் ஒன்றரை மாதத்திலேயே முடிந்து விட்டது. அந்த காலகட்டத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்தவர் பிரசாந்த். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் பிரசாந்தின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமையும் என்பதை எதிர்பார்க்கலாம். அவருக்கு இரண்டாவது திருமணம் செய்வது பற்றி பிரசாந்தின் தந்தை தியாகராஜன் முயற்சி செய்து வருகிறார். 51 வயதாகும் பிரசாந்துக்கு மீண்டும் நல்ல முறையில் வாழ்க்கை அமைய நினைத்துக் கொள்வோம் என பயில்வான் கூறியுள்ளார். பிரசாந்தின் இரண்டாவது திருமணம் குறித்த செய்தி தான் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

