“அன்றே கணித்த ஜோசியக்காரன்”…. நடிகர் மாரிமுத்து இறப்பு குறித்து பயில்வான் சர்ச்சை பேச்சு…!!

By admin on புரட்டாதி 9, 2023

Spread the love

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் எதிர்நீச்சல் தொடரின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். நடிகர் மாரிமுத்து கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். பிரபல இயக்குனர்களான வசந்த், சீமான், மணிரத்தினம், எஸ்.ஜே சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்துள்ளார்.

   

இவர் பரியேறும் பெருமாள், சண்டைக்கோழி, வாலி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மாரிமுத்து தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜோதிடர்கள் குறித்து பேசி உள்ளார்.

   

 

அந்த நிகழ்ச்சியில் ஒரு ஜோதிடர் மாரிமுத்துவை பார்த்து உங்களது இடுப்புக்கு மேலே பிரச்சனை இருக்கிறது என கூறியுள்ளார். அதற்கு மாரிமுத்து இடுப்புக்கு மேல் ரத்தம் தான் இருக்கிறது கோளாறு இல்லை என கூறியுள்ளார். இது தொடர்பான காரசாரமான விவாத காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.