நடிகை விஷ்ணுபிரியா “மார்க் ஆண்டனி” படத்தில் சில்க் ஸ்மிதா போன்று நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நடிகை விஷ்ணுபிரியா தனக்கும் சில்க் ஸ்மிதாவிற்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் தென்னிந்திய திரையுலக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சில்க் ஸ்மிதா கடந்த 1996-ஆம் ஆண்டு திடீரென உயிரிழந்தார்.

நடிகர் விஷால், எஸ்.ஜே சூர்யாவின் படமான “மார்க் ஆண்டனி” படம் வெளிவர உள்ளது. அந்த படத்தில் நடிகை விஷ்ணுபிரியா சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது நடிகை விஷ்ணு பிரியா தனியார் தொலைக்காட்சிக்கு அழைத்த பேட்டியில் தனது சொந்த ஊர் திருப்பதி என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விஷ்ணு பிரியா எம்.பி.ஏ படித்து வருகிறார். சில்க் ஸ்மிதா 1996-ஆம் ஆண்டு இறந்த நிலையில் விஷ்ணு பிரியா 1997-ஆம் ஆண்டு பிறந்துள்ளார். சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாள் டிசம்பர் 3 என்றும், தனது பிறந்த நாள் டிசம்பர் 13-ஆம் தேதி எனவும் குறிப்பிட்டு தன்னை சில்க் ஸ்மிதாவின் மறுபிறவி என பலரும் கூறுவதாக விஷ்ணுபிரியா தெரிவித்துள்ளார். மேலும் நடிகை சில்க் ஸ்மிதா பலமுறை தனது கனவில் வந்ததாகவும் விஷ்ணு பிரியா கூறியுள்ளார்.

