காட்டுத்தீயாய் பரவும் ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து.. காரணம் இதுதான்.. பகீர் கிளப்பிய பயில்வான்..!

By Mahalakshmi on ஆனி 25, 2024

Spread the love

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வரும் நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் பேசியிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் என்கின்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் என அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.

   

   

இவர் கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி செல்வனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு பெரிய அளவு ஹிட்டுக் கொடுக்கவில்லை. கடைசியாக சைரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

 

இந்த திரைப்படமும் சுமாரான அளவே வரவேற்பு பெற்றிருந்தது. ஜெயம் ரவி 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் முடிந்து விட்டது. இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஒவ்வொரு செலிப்ரேஷன் அதாவது பிறந்தநாள், திருமணநாள், தீபாவளி , பொங்கல், நியூ இயர் என எந்த ஒரு பண்டிகையாக இருந்தாலும் குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து சொல்வார். அது மட்டுமில்லாமல் நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷூட் எடுத்தும் வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இருவருக்கும் அடிக்கடி சண்டை வருவதாகவும், இதனால் விரைவில் இருவரும் விவாகரத்து முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. அதற்கேற்றது போல் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் சமூகவலைதள பக்கத்திலிருந்து நீக்கி இருக்கின்றார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து போய் இருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் பேசியிருக்கின்றார். அதில் பல விஷயங்களை பகிர்ந்து இருந்த இவர் ஜெயம் ரவியும், அவரது மனைவி ஆர்த்தியும் கல்லூரி படிக்கும்போது இருந்தே காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவரின் தாயார் சுஜாதா விஜயகுமார் பெரும் பணக்காரர் சன் தொலைக்காட்சியில் பல சீரியல்களை தயாரித்திருக்கின்றார்.

தமிழில் ஒரு சில திரைப்படங்களை தயாரித்திருக்கும் இவர் சமீப காலமாக தனது மருமகனை மிகப்பெரிய நடிகராக மாற்ற வேண்டும் என்ற கனவுடன் அவரின் திரைப்படங்களை தயாரித்து வருகின்றார். ஆனால் சமீபத்தில் அவர் தயாரித்த படங்கள் எதுவுமே அந்த அளவுக்கு சரியாக போகவில்லை. அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவியை படத்திற்கு புக் செய்ய வேண்டும் என்றால் முதலில் அவரது மாமியாரிடம் தான் கதை கூற வேண்டும்.

ஏனென்றால் அவர்தான் படத்தை எப்போதும் தயாரிப்பார். இதனால் கடுப்பான பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இது போன்ற ஒரு புரளியை கிளப்பி விட்டு இருக்கிறார்கள். இந்த வதந்தி தான் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இவர்கள் இருவரும் மிக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் சந்தோஷத்தை குலைப்பதற்காக தான் இப்படி எல்லாம் தகவல் வெளியிட்டு வருகிறார்கள்” என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசியிருக்கின்றார்.