நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி தனது instagram பக்கத்தில் வெளியீட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு காதல் வந்துவிட்டதாக கூறி வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமானவர் ரட்சிதா மகாலட்சுமி. அதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியல், கலர்ஸ் தமிழில் அம்மன், ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமாக இருக்கின்றார்.
அது மட்டும் இல்லாமல் இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்து வந்த போது நடிகர் தினேஷை காதலித்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ரட்சிதா மகாலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஆறு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகும் அவர் சேர்ந்து வாழ வில்லை. அதைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அவரது கணவர் தினேஷும் கலந்து கொண்டு தனது மனைவியுடன் சேர்வதற்கான எல்லாம் முயற்சியும் மேற்கொண்டார்.
ஆனால் அதில் எந்த பயனும் இல்லை தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தன் கைவசம் மூன்று தமிழ் திரைப்படங்களும் ஒரு கன்னட திரைப்படங்களையும் வைத்திருக்கின்றார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ரட்சிதா மகாலட்சுமி அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
இவரை 1 மில்லியனுக்கும் அதிகமாக ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லவ் என்ற சிம்ப்ளை காட்டும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ரட்சிதாவுக்கு புதிதாக காதல் வந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
View this post on Instagram