சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. ஒவ்வொரு குடும்பங்களும் சீரியல்களை பார்த்து ரசித்து வருகிறார்கள். சீரியலுக்கு என்று பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை மக்கள் பெரும்பளவில் விரும்பி பார்ப்பார்கள். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது விஜய் டிவி.
இந்த இரண்டு சேனல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் போட்டி போடும். அப்படியே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து இருக்கும் சீரியலை பற்றி தான் இதில் நாம் பார்க்க போகிறோம். இதில் கடந்த வாரம் எட்டாவது இடத்தில் இருந்து இந்த வாரம் ஆறாவது இடத்திற்கு சென்று இருப்பது மல்லி சீரியல். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் நகைச்சுவை, காதல், ரொமான்ஸ் என அனைத்தும் ரசிக்கும் படியாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
அதைத்தொடர்ந்து ஐந்தாவது இடத்தை பல மாதங்களாக கெட்டியாக பிடித்துக் கொண்டு இருக்கும் சீரியல்தான் வானத்தைப்போல. இந்த சீரியல் அண்ணன் தங்கைக்கு இடையே இருக்கும் பாசத்தை காட்டி வருகின்றது. பொன்னி பற்றி எந்த விஷயமும் சின்ராஸுக்கு தெரியக்கூடாது என்பதற்காக பல வேலைகளை பார்த்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இருக்கின்றது. இந்த சீரியல் வர வர சுவாரசியம் குறைந்து வருகின்றது. தொடர்ந்து ரோகிணியை மாட்டி விடாமல் இயக்குனர் காப்பாற்றி வருகின்றார். மேலும் மீனா மற்றும் முத்துவின் கேரக்டரை டம்மியாகவே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக மூன்றாவது இடத்திற்கு கயல் சீரியல் இருக்கின்றது.
கடந்த வாரம் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தால் கயல் சீரியல் இந்த வாரம் மூன்றாவது இடத்திற்கு சென்று இருக்கின்றது. இதற்குக் காரணம் தொடர்ந்து கயலின் திருமணத்தை ஜவ்வு போல் இழுத்து வருவதால் தான். இந்த முறை இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது புத்தம் புது சீரியலான மருமகள். கேபிரிலா மற்றும் ராகுல் ரவி தங்களுடைய எதார்த்தமான நடிப்பை வெளியிட்டு வருகிறார்கள். இது பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கின்றது.
எப்போதும் போல முதல் இடத்தை பிடித்திருப்பது சிங்கப்பெண்ணே சீரியல் தான். ஆனந்திக்கும் அன்புக்கும் இடையே உள்ள காதல் ,திருமணம் நடக்க வேண்டும் என்ற ஆசையுடன் மக்கள் விறுவிறுப்பாக பார்த்து வருகிறார்கள் .இதற்கு இடையில் மகேஷ் உள்ளே புகுந்த ஆட்டத்தை குழப்பி வருகின்றார். இதனால் அன்புவின் காதல் என்ன ஆகும் என்பதை பார்ப்பதற்கு மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.