‘யாரு இவனா… பன்னிக்குட்டி மாதிரி இருக்கான்… ’- லுக்கைப் பார்த்து நம்பாத மம்மூட்டிக்கு நடித்துக் காட்டி பாராட்டு வாங்கிய பிரபல நடிகர்!

By vinoth on ஆடி 10, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் வடிவேலு குழுவின் காமெடி நடிகர்களில் நடிகர்களில் ஒருவராக வளம் வரும் பாவா லட்சுமணன். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் வடிவேலுவோடு இணைந்து நடித்த பின்னர் இவருக்கு பெரிய அங்கிகாரம் கிடைத்தது. அதன்பின்னர் அவர் விவேக், சந்தானம் மற்றும் யோகி பாபு ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.

பாவா லட்சுமணன் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் அறியப்படுபவர் இல்லை. அவர் ஒரு புரொடக்‌ஷன் மேனேஜராக பல ஆண்டுகள் வேலை செய்துள்ளார். குறிப்பாக இயக்குனர் விக்ரமனின் படங்களில் தொடர்ந்து பணியாற்றிய அவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான புரொடக்‌ஷன் மேனேஜரானார்.

   

அப்படி அவர் ஆனந்தம் படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் போதுதான் அந்த படத்தில் ஒரு திருடன் வேடத்தில் நடித்து கவனிக்கப்படும் நடிகர் ஆனார். அந்த படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்புப் பற்றி பேசியுள்ள பாவா லட்சுமணன் “அந்த கதாபாத்திரத்தில் முதலில் வடிவேலுதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரால் தொடர்ந்து 40 நாட்கள் நடிக்க முடியாது என சொல்லிவிட்டார்.

   

அதனால் பின்னர் விவேக்குக்கு சென்றது அந்த பாத்திரம். அவராலும் அப்போது நடிக்க முடியவில்லை. அதன் பின்னர் சார்லிக்கு சென்று அட்வான்ஸ் எல்லாம் கொடுத்தோம். ஆனால் அவராலும் நடிக்க முடியவில்லை. அதன் பின்னர் இயக்குனர் லிங்குசாமி ‘என்னை நடிக்க சொன்னார். நான் மம்மூட்டி எல்லாம் இருப்பதால் பயந்தேன்’. ஆனால் எனக்கு தைரியம் சொல்லி நடிக்கவைத்தார்.

 

ஷூட்டிங்கின் போது இடைவேளையில் அந்த திருடன் வேடத்தில் யார் நடிக்கப் போவது எனக் கேட்டார் மம்மூட்டி. என்னைக் காட்டியது, “இவனா பன்னிக்குட்டி மாதிரி இருக்கான். இவனப் பாத்தா பசியில திருடுற மாதிரியா இருக்கு. இவன வச்சு ஒரு சீன் எடுத்துக் காட்டு அப்புறம் பாக்கலாம்’ என சொல்லிவிட்டார். அப்புறம் நான் ஒரு சீனில் நடித்த பின்னர் என்னை அழைத்து “லட்சுமணனா நல்லா நடிக்குற. கேமரா மேல பயம் இல்லாம நடிக்கணும்” என பாராட்டினார்” எனக் கூறியுள்ளார்.