காபி குடிக்கும் போது கூட இப்படி ஒரு கவர்ச்சி உடையா.. பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

By Mahalakshmi on ஜூலை 9, 2024

Spread the love

கவர்ச்சி உடையில் நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளிவந்த சேவல் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

   

 

அதைத் தொடர்ந்து ஜீவாவுடன் தெனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவரால் தொடர்ந்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பெற முடியவில்லை.

பின்னர் புது நடிகைகளின் வரவால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோமியோ ஜூலியட் என்ற திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.

பின்னர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முத்தின கத்திரிக்கா, அரண்மனை 2 ஆகிய  திரைப்படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருக்கின்றார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய பூனம் பஜ்வா அவ்வப்போது தான் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.