பட்டப்பகலில் பயங்கரம்..! பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக்கொலை… ரசிகர்கள் அதிர்ச்சி..!!

By Soundarya on மார்கழி 19, 2025

Spread the love

ஈக்வடார் நாட்டின் முன்னணி கால்பந்து வீரரான மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் நேற்று குயாகுவில் நகரில் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார். 33 வயதான மரியோ பினிடா, வட குயாகுவிலில் உள்ள சமனேஸ் (Samanes) பகுதியில் ஒரு கடையின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் மரியோ பினிடா   சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவருடன்  அடையாளம் தெரியாத ஒருவரும் இறந்து கிடந்துள்ளார். பினிடா பார்சிலோனா ஸ்போர்டிங் கிளப் அணிக்காக விளையாடி வந்த ஒரு தற்காப்பு ஆட்டக்காரர்  ஆவார். அவர் ஈக்வடார் தேசிய அணிக்காக ஒன்பது சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.