ஆப்பு வைத்த AI..! “370 பேர் பணிநீக்கம்” அமேசான் நிறுவனம் எடுத்த அதிர்ச்சி முடிவு… கலக்கத்தில் ஊழியர்கள்…!!

By Soundarya on மார்கழி 19, 2025

Spread the love

அமேசான் நிறுவனம் தனது ஐரோப்பிய தலைமையகமான லக்சம்பேர்க்கில், வரும் வாரங்களில் சுமார் 370 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது. அந்த அலுவலகத்தின் வரலாற்றிலேயே இதுவே மிகப்பெரிய பணியாளர் குறைப்பு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. லக்சம்பேர்க்கில் உள்ள மொத்தம் 4,370 ஊழியர்களில் சுமார் 8.5% பேர் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவார்கள்.

அமேசான் நிறுவனம் தனது கவனத்தை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை நோக்கித் திருப்பி வருவதால், இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே அக்டோபர் 2025-ல் உலகம் முழுவதும் 14,000 வேலைவாய்ப்புகளைக் குறைக்கப்போவதாக அமேசான் அறிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது ஐரோப்பிய தலைமையகத்திலும் இந்த ஆட்குறைப்பு நடத்தப்படுகிறது. தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் AI-ன் ஆதிக்கம் காரணமாக, முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.