ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி முன்னதாகவே வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை வருகின்றது. ஆகஸ்ட் மாதத்தில் கிட்டத்தட்ட பாதி மாதம் வங்கிகள் மூடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதில் சில விடுமுறை நாட்கள் மட்டும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம்.
ஆகஸ்ட் 3 (ஞாயிற்றுக்கிழமை) – திரிபுரா: கெர் பூஜை காரணமாக விடுமுறை.
ஆகஸ்ட் 8 (வெள்ளிக்கிழமை) – சிக்கிம், ஒடிசா: டென்டோங் லோ ரம் ஃபாத்துக்கு மூடப்படும்.
ஆகஸ்ட் 9 (சனிக்கிழமை) – உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்: ரக்ஷாபந்தனுக்கு மூடப்படும்.
ஆகஸ்ட் 13 (புதன்கிழமை) – மணிப்பூர்: தேஷ்பக்தி திவாஸுக்கு மூடப்படும்.
ஆகஸ்ட் 15 (வெள்ளிக்கிழமை) – அகில இந்திய அளவில்: சுதந்திர தினம் (தேசிய விடுமுறை)
ஆகஸ்ட் 16 (சனிக்கிழமை) – அனைத்து மாநிலங்களும்: ஜன்மாஷ்டமிக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 16 (சனிக்கிழமை) – குஜராத், மகாராஷ்டிரா: பார்சி புத்தாண்டுக்காகவும் விடுமுறை.
ஆகஸ்ட் 26 (செவ்வாய்) – கர்நாடகா, கேரளா: விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 27 (புதன்கிழமை) – ஆந்திரப் பிரதேசம், கோவா, குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஒடிசா, சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா: விநாயகர் சதுர்த்தி
ஆகஸ்ட் 28 (வியாழக்கிழமை) – ஒடிசா, பஞ்சாப், சிக்கிம்: நுவாகாய்க்கு மூடப்படும்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 23ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை ஆகிய நாட்களில் வங்கிகள் இயங்காது. அதேபோல, ஞாயிறு விடுமுறை காரணமாக 3, 10, 17, 24, 30 ஆகிய தினங்களில் வங்கிகள் இயங்காது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…