தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளன. அவர் இயக்கிய அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தன.
இடையில் பாலு மகேந்திரா இயக்கிய சில படங்கள் வணிக ரீதியாக சரியாக போகவில்லை. அதனால் அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார். அப்போது அவருடன் பணியாற்றிய கமலஹாசன் மற்றும் சில்க் ஸ்மிதா போன்றவர்கள் அவருக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்துள்ளனர்.

#image_title
90 களின் இறுதியில் பாலு மகேந்திரா கிட்டத்தட்ட திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பை இழந்தார். அதனால் தொலைக்காட்சியில் கதை நேரம் என்ற பெயரில் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை சினிமாவாக எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் சில படங்களை இயக்கினாலும் அவை பெரியளவில் கவனம் பெறவில்லை. அதன்பின்னர் அவரின் உதவி இயக்குனர்கள் அடுத்தடுத்து படங்களை இயக்கி அவருக்கு பெருமை சேர்த்தனர்.
இந்நிலையில் பாலு மகேந்திரா எத்தனையோ படங்கள் இயக்கியிருந்தாலும், தான் இயக்கிய ‘வீடு’ மற்றும் ‘சந்தியா ராகம்’ ஆகிய படங்கள்தான் தனக்கு மிகவும் பிடித்த படங்கள் என்று கூறியுள்ளார். மேலும் அதற்கானக் காரணமாக “அந்த இரு படங்கள் குறைவான தவறுகளோடு, அதிக சமரசம் இல்லாமல் நான் எடுத்த படங்கள்” என்று கூறியுள்ளார்.

#image_title
இந்த இரு படங்களும் பாடல்கள் இல்லாமல் எந்தவிதமான கமர்ஷியல் சமரசங்களும் எடுக்கப்பட்டவை. வீடு படத்தின் பட்ஜெட்டே 2 லட்சம் ரூபாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
