இந்தியாவின் வழிபாட்டு தலங்களில் மிக முக்கியமான ஒன்று அமிர்தசரஸ் பொற்கோவில். பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் என்ற இடத்தில அமைந்துள்ளது குருத்துவார். இதை பொதுவாக பொற்கோயில் என்று அழைப்பார்கள். சீக்கிய மக்களின் மிகப் பழமையான கோவில் மற்றும் வழிபாட்டுத்தலம் இதுவாகும். இதைப் பற்றிய வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராமதாஸ் 16ஆம் நூற்றாண்டில் குரு அர்ஜுன் சீக்கிய புனித நூலான குரு கிரந்த சாகிப் எனும் ஆதி கிரந்தத்தை முடித்து இந்த குருத்துவாதில் அதை கோவிலை நிறுவினார். இந்த புனித கோயில் ஜாதி மத பேதம் இன்றி அனைத்து மக்களும் வந்து வழிபட வேண்டும் என்று அமைக்கப்பட்டது. அது போலவே அனைத்து மக்களும் இந்த கோயிலை சென்று வழிபடுகிறார்கள் என்பது தான் சிறப்பு.
இந்த கோவிலின் முக்கிய விசேஷமாக பார்ப்பது தங்க கோவில் என்ற பெயருக்கு ஏற்றார் போல் தங்கத்தினால் ஜொலிப்பது தான். உண்மையிலேயே இது தங்கத்தை வைத்து கட்டினார்கள் என்றால் அது உண்மைதான். பதினாராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த குருத்துவார் கோவிலை 19 ஆம் நூற்றாண்டில் மகாராஜா ரஞ்சித் சிங் பராமரித்து வந்தார். வெளி தாக்குதலில் இருந்து பஞ்சாப் பகுதியை பாதுகாத்து குருத்துவாராவின் மேல்மாடிகளை தங்கத்தினால் மூடினார். அதுதான் இன்று கோல்டன் டெம்பிள் என்று அழைக்கப்படுகிறது.
15 ஆம் நூற்றாண்டில் இந்த குருத்வரா தளம் அமைக்கப்பட்ட இடத்திற்கு வந்த முகலாய பேரரசர் அக்பர் குரு ராமதாஸின் வாழ்க்கை வழிமுறையால் ஈர்க்கப்பட்டு அவருக்கு நிலம் மற்றும் இடங்களை வழங்கிவிட்டு சென்றார். நடுவில் ஏறி இருந்திருக்கிறது அந்த ஏரியில் குருத்துவாரா கோவிலைக் கட்டி அந்த ஏரியை விரிவுபடுத்தி அதை சுற்றி சிறிய குடியிருப்பையும் உருவாக்கினார் குரு ராமதாஸ்.
ஹெர்மெந்திர் சாகிப் சித்திரங்கள் இந்த கோயிலில் இருக்கிறது. இது சீக்கியர்களின் உலக கண்ணோட்டத்தை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்த பொற்கோவிலில் குருநானக் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஆண்டுதோறும் பல சுற்றுலாப் பயணிகளும் வழிபாடுவதற்கான இந்திய மக்களும் இங்கு குவிக்கின்றனர். இந்த பொற்கோவில் தனித்துவம் வாய்ந்ததாகவும் இந்த கோவிலுக்கு சென்றால் மன அமைதி கிடைப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.