இவங்க தான்பா ரியல் ஹீரோஸ்.. கணவரை இழந்த பெண்ணுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த KPY பாலா, மாஸ்டர் ராகவா லாரன்ஸ்.. வீடியோ இதோ..!!

By Priya Ram on மார்ச் 30, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலா. அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அவர் வெள்ளி துறையில் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். காமெடியனாக தனது பயணத்தை தொடங்கிய பாலா சமூக அக்கறையுடன் பலருக்கும் உதவி செய்து வருகிறார்.

   

குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவுவது, மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்வது, மருத்துவ வசதி இல்லாத இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது உள்ளிட்ட பல சேவைகளை செய்துள்ளார் பாலா. சமீபத்தில் கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை வழங்கினார் பாலாவின் தன்னலமற்ற சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

   

 

இந்த நிலையில் பாலாவும் புகழ்பெற்ற நடிகருமான ராகவா லாரன்ஸும் இணைந்து கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளனர். பாலா செய்யும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் தனது பங்கு இருக்கும் என ராகவா லாரன்ஸ் ஏற்கனவே கூறியிருந்தார். கணவரை இழந்து முருகம்மாள் என்ற பெண் தனது 3 பெண் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

அவர் மின்சார ரயிலில் சமோசா விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்ட வேண்டும் என்பது அந்த பெண்ணின் ஆசை. இதனை அறிந்த பாலா தனது ரோல் மாடலான ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் இணைந்து ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை பாலா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் ராகவா லாரன்சையும், பாலாவையும் பாராட்டி வருகின்றனர்.