காதல் கொண்டேன் படத்தில் நடித்த நடிகர் இப்போ எப்படி இருக்காருன்னு தெரியுமா..? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

By Priya Ram

Published on:

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் காதல் கொண்டேன். இந்த படத்தில் சோனியா அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். இது போக நாகேஷ், டேனியல் பாலாஜி, சுதீப் சாரங்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

   

இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சுதீப் சாரங்கி கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான என்னவோ புடிச்சிருக்கு, 2005-ஆம் ஆண்டு வெளியான காதலே ஜெயம் ஆகிய படங்களில் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார். பெங்காலி மொழியில் உருவான சில திரைப்படங்களிலும் சுதீப் சாரங்கி நடித்துள்ளார். அதன்பிறகு அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.

இந்த நிலையில் சுதீப்பின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் காதல் கொண்டேன் படத்தில் நடித்த ஆதியா இப்போ இப்படி இருக்காரு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

author avatar
Priya Ram