கொலை, திருட்டு மற்றும் பாலியல் வன்கொடுமை என எந்த ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தாலும் அவர்களுக்கு போலி ஆவணங்கள் மூலமாக ஜாமீன் பெற்று தரக்கூடிய மோசடி கும்பலை உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போலியான நில வருவாய் ஆவணங்கள், போலியான ஆதார் அட்டைகள் மற்றும் ஜோடிக்கப்பட்ட அடையாள ஆவணங்களை பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்க உதவும் விதமாக தொழில் முறை ஜாமின் தாரர்களாக இந்த குழு செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுவரை போலீசார் நடத்திய விசாரணையில் இந்த மோசடி கும்பல் 23 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் பெற்று தந்துள்ளது. இதற்காக ஒரு வழக்குக்கு சுமார் 20000 ரூபாய் வரை வசூலித்துள்ளனர். இந்த வழக்கில் கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமினில் வெளிவந்த குற்றவாளி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…