‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகிய ஜெனிஃபர்.. பிரபல சீரியல் மூலம் கொடுத்த ரீஎன்ட்ரி..!

By Mahalakshmi on வைகாசி 4, 2024

Spread the love

விஜய் டிவி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக ஜெனிஃபர் தான் நடித்து வந்தார். சின்னத்திரை வெள்ளித்திரை இரண்டிலும் பிரபல நடிகையாக வளம் வந்த ஜெனிபர்.

   

கர்ப்பமாக இருந்த காரணத்தினால் சீரியலில் இருந்து வெளியேறினார். அதற்குப் பிறகு எந்த சீரியலிலும் இவர் நடிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நடிகை ஜெனிபர் ரீ என்ட்ரி கொடுத்திருக்கின்றார்.

   

 

இது தொடர்பான ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும் சீரியலில் மீண்டும் களம் இறங்கிய ஜெனிஃபருக்கு ரசிகர்கள் தாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த ப்ரோமோ உங்களுக்காக இதோ..