தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி உள்ளிட்ட மொழிகளில் 300-க்கும் ஏற்பட திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ஸ்ரீ பிரியா. 70 மற்றும் 80-களில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீபிரியா. அதிக திரைப்படங்களில் நடித்த இவர் 1974 ஆம் ஆண்டு அறிமுகமானார். முருகன் காட்டிய வழி என்கின்ற படம் மூலமாக அறிமுகமானவர் ஸ்ரீபிரியா.
அதை தொடர்ந்து அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தை சுஜாதாவின் தங்கையாக வருவார். பின்னர் தமிழில் மட்டும் 108 படங்களில் நடித்திருக்கிறார். ரஜினி, கமலுடன் அதிக திரைப்படங்களில் நடித்த இவர் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர். இவர் கலைஞர் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருந்தார். கலைஞரின் எழுத்தில் உருவான மூன்று திரைப்படங்களில் நடித்திருந்தார் ஸ்ரீப்ரியா.
அந்த படத்தில் பணியாற்றிய போது கலைஞருடன் ஏற்பட்ட அனுபவங்களை பற்றி பகிர்ந்து இருந்தார். பொதுவாக சினிமா வசனகர்த்தாக்கள் பலரும் வசனங்களில் சிறு வார்த்தையை மாற்றுவதற்கு கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்த படங்களில் நடித்த போது வசனங்களில் ஏதாவது கடினமாக இருந்தால் உங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளுங்கள் என்று முழு உரிமை அளித்தவர் கலைஞர் என்று பெருமையாக பேசி இருந்தார் நடிகை ஸ்ரீபிரியா.