
CINEMA
‘அழகி’ படத்தில் சிறுவயது பார்த்திபனாக நடித்த நடிகரா இது?… லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்…
இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் நடிப்பில் 2002ல், தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘அழகி ‘. பார்த்திபன், நந்திதாஸ், தேவயானி, மோனிகா நடித்திருந்த இப்படம் சிறந்த திரைப்படத்துக்கான பிலிம் பார் விருதையும் பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற ‘பாட்டு சொல்லி’ என்ற பாடலுக்காக சாதனா சர்கம் சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை வென்றார்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இரண்டரை கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இத்திரைப்படத்தில் சிறு வயது பார்த்திபனாக நடிகர் சதீஷ் நடித்திருப்பார்.
நடிகர் சதீஷ் இப்படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அதேபோல இவர் பரத் நடித்த காதல் மற்றும் தனுஷின் தேவதையை கண்டேன் போன்ற படங்களை நடிக்கும் வாய்ப்பையும் இழந்துள்ளார்.
தற்பொழுது சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதால் நண்பர்களுடன் இணைந்து சொந்த தொழில் செய்து வருகிறார் நடிகர் சதீஷ். இந்நிலையில் நடிகர் சதீஷின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் படுவைராலாகி வருகிறது.