Connect with us

Tamizhanmedia.net

‘கேரள சூப்பர் ஸ்டார்’ நடிகர் மோகன்லாலின் அழகான குடும்பத்தை பாத்துருக்கீங்களா?… நீங்கள் இதுவரை பார்த்திடாத அழகிய புகைப்படங்களின் தொகுப்பு!…

CINEMA

‘கேரள சூப்பர் ஸ்டார்’ நடிகர் மோகன்லாலின் அழகான குடும்பத்தை பாத்துருக்கீங்களா?… நீங்கள் இதுவரை பார்த்திடாத அழகிய புகைப்படங்களின் தொகுப்பு!…

மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் மோகன்லால். இந்திய திரைத்துறையின் தேசிய திரைப்பட விருதை நான்கு முறையும், ஒன்பது முறைக்கு மேல் பிலிம்பேர் விருதையும் பெற்றவர்.

இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்று தென்னிந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்குபவர் நடிகர் மோகன் லால். இவர் 1960 இல் கேரளாவில் விஸ்வநாத நாயக்கருக்கும் சாந்தகுமாரிக்கும் மகனாக பிறந்தவர்.

பள்ளி பருவத்தின் பொழுதே நடிப்பில் இருந்த ஆர்வத்தினால் நாடகங்களில் ஆர்வத்தோடு பங்கேற்றார். 1978 இல் முதன்முறையாக இவர் நடிப்பில் திறநோட்டம் என்ற திரைப்படம் வெளியானது.

இதை தொடர்ந்து 1980இல் மஞ்சில் விரிஞ்ச பூக்கள் என்ற திரைப்படம் இவருக்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த ராஜாவின் டே மகன், சன்மானம் உள்ளவருக்கு சமாதானம், காந்தி நகர் செகண்ட் ஸ்ட்ரீட், நாடோடிக்கட்டு, வரவேல்பு, சித்ரம்,

 

தூவானத்தும்பிகள், தாழ்வாரம் போன்ற வெற்றி படங்கள் இவரை மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக மாற்றியது என்றே கூறலாம்.

நடிகர் மோகன்லால் மலையாள திரைப்படங்களில் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.

இவர் தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ‘இருவர்’ திரைப்படத்தின் மூலம் கால் பதித்தார் .பின்னர் ஹிந்தியில் கம்பெனி என்ற திரைப்படத்தில் நடித்து தனது முத்திரையை பதித்தார்.

நடிகர் மோகன்லால் 1988 சுசித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் இருக்கின்றனர்.

தற்பொழுது இவரது மகன் பிரணவ் திரையுலகில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். விரைவில் ஹீரோவாக நடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடிகர் மோகன்லாலின் மகள் மற்றும் மகனின் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் மோகன் லால் தற்பொழுது தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top