Categories: ASTROLOGY

70 ஏக்கர் பரப்பளவு.. 2100 கிலோ எடையு மணி.. மிரள வைக்கும் அயோத்தி ராமர் கோவில்.. மொத்த செலவு எவ்ளோ தெரியுமா..?

பல வருட போராட்டத்திற்குப் பின் பா.ஜ.க-வின் கனவான அயோத்தி ராமர் கோவில் ஒரு வழியாகக் கட்டி முடிக்கப்பட்டு மிகச் சிறப்பாக கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.  ராமர் கோவிலைக் கட்டுவதற்கு கடந்த 2019-ல் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து 2020-ல் பூமி பூஜைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிந்து உலகப் பிரசித்த கோவிலாக உருவெடுத்துள்ளது அயோத்தி ராமர் கோவில். இதனால் அயோத்தி நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. புராணங்களின் அயோத்தி நகரை ஆண்ட தசரத மன்னனின் வாரிசாக மகா விஷ்ணு உருவெடுத்த ஏழாவது அவதாரம் தான் ஸ்ரீ ராமர்.

ஸ்ரீராமர் பிறந்த இடமான ராமஜென்ம பூமி என்ற பகுதியை இந்துக்கள் புனித இடமாக வழிபட்டு வந்தனர். பின்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில் ஏராளமான வழக்குகள், பிரச்சினைகள் உள்ளிட்டவற்றைச் சந்தித்து இறுதியாக இக்கோவில் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இன்று நன்பகல் அதாவது பகல் 12.20 மணிக்கு இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நாட்டின் முக்கியத் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இக்கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கின்றனர். மேலும் அயோத்தி நகரம் முழுக்க 3 அடுக்க உச்சகட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒரு மண்டலம் இத பக்தியோட செஞ்சு பாருங்க.. எப்படிப்பட்ட கடனை அடைக்கவும் வழி பிறக்கும்

அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோவிலின் முக்கிய தெய்வம் குழந்தை வடிவில் உள்ள ராமர் ஆகும். கோவிலின் முக்கிய தெய்வம் ஷி ராம் லல்லா விரஜ்மன் என்று அழைக்கப்படுகிறது. அயோத்தியில் உள்ள ராம் மந்திரின் இறுதி அமைப்பில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி (பிறந்த இடம்) தீர்த்த பகுதியில் சூரியன் , கணேஷ் , சிவன் , தேவி துர்கா மற்றும் பிரம்மா ஆகியோருக்கு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

அயோத்தியில் ராமர் கோவிலின் பட்ஜெட் 1800 கோடி ரூபாய். L&T நிறுவனம் எந்தவித கட்டணமும் இன்றி இந்த திட்டத்தை உருவாக்கி வருகிறது. ஸ்ரீ ராம் ஜன்மபூமி (பிறந்த இடம்) தீர்த்த பகுதியின் மொத்த பரப்பளவு 70 ஏக்கருக்கு மேல் இருக்கும்.

கோவிலின் மொத்த கட்டப்பட்ட பரப்பளவு : 57,400 ச.கி. அடி மாடிகளின் மொத்த எண்ணிக்கை: 3
ஒவ்வொரு தளத்தின் உயரம்: 20 அடி. தரை தளத்தில் உள்ள நெடுவரிசைகள் : 160. முதல் தளத்தில் உள்ள நெடுவரிசைகள்: 132. இரண்டாவது மாடியில் உள்ள நெடுவரிசைகள்: 74. கோயிலில் உள்ள வாயில்களின் எண்ணிக்கை: 12

#image_title

ஸ்ரீ ராமர் பிறந்த இடம் தீர்த்த பகுதிக்குள் பல மத மற்றும் பிற முக்கிய வசதிகள் இருக்கும். சொற்பொழிவு கூடம், பிரார்த்தனை கூடம், கல்வி நிறுவனம், அருங்காட்சியகம், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் வசதி போன்ற வசதிகள் இருக்கும்.

மனிதன் எப்படி இருக்கணும்-னு.. கேப்டன் குறித்த யாரும் நினைத்துக்கூட பார்க்காத ஒரு கோரிக்கையை வைத்த நடிகர் ஜெயம் ரவி..

கோவிலின் புதிய வடிவமைப்பு ஷில்ப சாஸ்திரம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி உள்ளது. கோவிலின் புதிய வடிவமைப்பு அசல் வடிவமைப்பிலிருந்து சற்று வித்தியாசமானது. அயோத்தியில் ராமர் கோயில் 161 அடி உயரமும் , 235 அடி அகலமும் , 360 அடி நீளமும் கொண்டதாக இருக்கும் .

ராமர் கோயிலின் கட்டுமானப் பணியின் தலைமைக் கட்டட கலைஞராக, பிரபல கட்டட கலை நிபுணரான சந்திரகாந்த்பாய் சோம்புரா பொறுப்பேற்றுள்ளார். ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்படும் மலைக்கற்களை தவிர, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், கடந்த 30 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டுள்ள 2 லட்சம் கற்களும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன.

#image_title

இக்கோவிலின் சுவர்களில் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கருவறை எண்கோண வடிவம் கொண்டதாகும். இக்கோவிலின் கர்ப்ப கிரகத்தில் நிறுவனப்பட உள்ள ராம் லல்லாவின் சிலையின் மீது சூர்ய கதிர்கள் படும் வகையில் கட்டப்பட்டுள்ளன. மூலவர் ராமர் சிலை 5 அடி உயரத்தில் வெள்ளை பளிங்கு கல்லால் அமைக்கப்படட்டுள்ளது. இந்த கோவிலுக்காக 2100 கிலோ எடையுள்ள மணி, எட்டாவிலிருந்து பிரத்யேகமாக செய்து கொண்டு வரப்பட்டுள்ளது. 6 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட இந்த மணியின் விலை மட்டும் 21 லட்சம் ரூபாயாகும்.

இன்னமும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட அயோத்தி ராமரை நீங்களும் ஒருமுறை தரிசித்து விட்டு வாருங்கள்.

John

Share
Published by
John

Recent Posts

வைரமுத்துன்னா சும்மாவா..! ‘கிழக்கு சீமையிலே’ படத்தில் நெப்போலியன், விஜயகுமார் மீசையை வைத்து பாட்டு எழுதிய வைரமுத்து..!

தமிழ் சினிமாவில் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக வளம் பெறுபவர் வைரமுத்து. அவர் பாடல் எழுத தொடங்கிய பிறகுதான் தமிழ் சினிமாவில்…

28 mins ago

AR. முருகதாஸுக்கு அழுத்தம் கொடுக்கும் சல்மான் கான்.. உருளப்போகும் சிவகார்த்திகேயனின் தலை.. என்ன நடக்கப்போகுதோ..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தனது சினிமா கேரியரை…

1 hour ago

வைரலான ஆடியோ நோட்.. சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் எடுத்த அதிரடி முடிவு.. அவரே வெளியிட்ட வீடியோ..!!

சுசித்ராவின் லேட்டஸ்ட் இன்டர்வியூ வீடியோ தான் இப்போது அனைத்து இடத்திலும் பேசப்படுகிறது. சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த சில…

2 hours ago

“இவன உலகத்துக்கே பிடிக்கும்… ஆனா எனக்குப் பிடிக்காது” – மோகன்லாலை பற்றி கசப்பான நினைவுகளைப் பகிர்ந்த நடிகை மெட்டி ஒலி சாந்தி!

சீரியல் பார்ப்பவர்கள் யாருக்குமே மெட்டி ஒலி சாந்தியைத் தெரியாமல் இருக்க முடியாது. பாசமான தாயாகவும், கொடுமைக்காரியான மாமியாராகவும் நடிப்பில் அசத்தும்…

3 hours ago

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷும், சிம்புவும் அதை செய்றாங்க… இதெல்லாம் ரொம்ப அநியாயம்… சினிமா பிரபலம் புலம்பல்!

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் அபரிமிதமானது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற சில சூப்பர் ஸ்டார்களே பெற்றது…

3 hours ago

கையில் கட்டுடன் கேன்ஸ் பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய்.. வியந்துபோன வெளிநாட்டினர்.. புகைப்படங்கள் வைரல்..

நடிகை ஐஸ்வர்யா ராய் மே 14ஆம் தேதி துவங்கப்பட்ட கேன்சர் திரைப்பட விழாவிற்கு கையில் பெரிய கட்டோடு கலந்து கொண்ட…

3 hours ago