#image_title
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தனது சினிமா கேரியரை தொடங்கிய இவர் தற்போது தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் அமரன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்பதான் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து படம் இயக்காமல் இருந்து வந்த ஏ ஆர் முருகதாஸ் ஹீரோவே இல்லாமல் அனிமேஷன் திரைப்படத்தை இயக்குவதற்கு முடிவு செய்து இருந்தார்.
தற்போது சிவகார்த்திகேயனுடன் கூட்டணி வைத்து சூப்பர் மேன் கான்செப்டில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு இடையில் ஹிந்தியில் சல்மான் கானை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு முடிவு செய்திருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
இந்த திரைப்படத்திற்கு சிக்கந்தர் என்ற தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்ற அறிவிப்பினை சல்மான் கான் தனது twitter பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் படம் இன்னும் தொடங்காமல் உள்ளதால் பாலிவுட்டில் இருந்து சல்மான் கான் விரைவில் படத்தை முடித்துவிட்டு வந்து இங்கு படத்தை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இதனால் சிவகார்த்திகேயன் படத்தின் ஷூட்டிங் 15 நாட்களில் முடிப்பதற்கு ஏஆர் முருகதாஸ் திட்டமிட்டு இருக்கின்றாராம். இப்படி படம் எடுப்பதால் தான் நிறைய படங்கள் தோல்வியை சந்திக்கின்றது, என வலைப்பேச்சு பிஸ்மி தனது பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார். அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் முருகதாஸ் சல்மான் கான் திரைப்படத்தை முடித்துவிட்டு தெலுங்கில் அல்லு அர்ஜுன் திரைப்படத்தையும் இயக்க இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…