Categories: சினிமா

கவிப்பேரரசுனா சும்மாவா..! ‘கிழக்கு சீமையிலே’ படத்தில் நெப்போலியன், விஜயகுமார் மீசையை வைத்து பாட்டு எழுதிய வைரமுத்து..!

Spread the love

தமிழ் சினிமாவில் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக வளம் பெறுபவர் வைரமுத்து. அவர் பாடல் எழுத தொடங்கிய பிறகுதான் தமிழ் சினிமாவில் புதுக்கவிதைகள் எளிதாக புழங்கத் தொடங்கியது. 7 முறை தேசிய விருது பெற்றிருக்கும் அவர் தற்போது இளம் பாடலாசிரியருடன் போட்டி போட்டு பாடல்களை எழுதி வருகிறார். இவர் சமீபத்தில் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்திலும் முழு பாடல்களை எழுதுவதற்கு கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

அவர் சமீபத்தில் கிழக்கு சீமையிலே படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்த பழைய வீடியோ ஓன்று தற்போது வைரலாகி வருகின்றது. பாரதிராஜா இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கிழக்கு சீமையிலே. அண்ணன் தங்கை உறவை வையமாக வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 1993ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி வெளியானது.

இப்படம் வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் மாயாண்டி தேவராக விஜயகுமார், தங்கை விருமாயியாக ராதிகாவும், ராதிகாவின் கணவர் சிவனாண்டியாக நெப்போலியனும் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா தனக்குரிய கிராமத்து பாணியில் சிறப்பாக இயக்கி இருந்தார். பாடல் வரிகளை வைரமுத்து எழுத ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் .

பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் உருவான பாடல் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார் வைரமுத்து , அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “இந்த திரைப்படத்தில் இரண்டு நடிகர். ஒருத்தர் நெப்போலியன், இன்னொருத்தர் விஜயகுமார். மேக்கப் போடுவதற்கு மீசையோடு வந்தார்கள். இந்த ரெண்டு பேர் யார் யார் என்று கேட்டேன்? இரண்டு பேரும் மைத்துனர்கள்.

விஜயகுமாரின் தங்கை ராதிகா ராதிகாவை திருமணம் செய்து கொண்டு போபவர்தான் நெப்போலியன். யார் நல்லவர் யார் கெட்டவர் என்று கேட்டேன். விஜயகுமார் நல்லவர் நெப்போலியன் கெட்டவர். மீசையை உற்றுப் பார்த்தேன் விஜயகுமார் மீசை நல்ல பெரிய மீசையாக இருந்தது. நெப்போலியன் மீசை கொடூர மீசையாக தெரிந்தது. அவ்வளவுதான் அப்படியே பாட்டு வரிகளை எழுத தொடங்கினேன்.

தங்கச்சி அண்ணனை பார்த்து பாட்டு பாடுகிறார். ‘அண்ணே போய் வரவா.. அழுது போய் வரவா.. மண்ணே போய் வரவா.. மாமரமே போய் வரவா.. அணில் வாழ் மீசை கொண்ட அண்ணே உன்ன விட்டு, புலிவால் மீசை கொண்ட புருஷனோட போய் வரவா”.. என்று எழுதியதாக கூறியிருந்தார். ஒரு மீசையை வைத்து ஒரு பாடலை உருவாக்க முடியும் என்றால் அது வைரமுத்துவால் மட்டும் தான் சாத்தியமாகும். தனது சிறப்பான வரிகளால் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றார் வைரமுத்து.

Mahalakshmi

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

5 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

6 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

6 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

6 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

6 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago