பிங்க் துப்பட்டாவால் சிக்கிய டிரைவர்…! “உல்லாசம் அனுபவித்து துடிதுடிக்க கொன்று….” பாலியல் தொழிலாளி கொலையில் திடீர் திருப்பம்….!!

By Devi Ramu on கார்த்திகை 21, 2025

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் மால்வானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த செப்டம்பர் மாதம் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கிடந்தது. பிரேதப் பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த பெண் 46 வயதான பாலியல் தொழிலாளி என்பதும், அவரது தோழிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. அந்தப் பெண் கொல்லப்படுவதற்கு முன்பு ஆட்டோ டிரைவர் ஒருவர் அவரை அழைத்துச் சென்றதாக தோழிகள் கூறியுள்ளனர்.

   

உடனே, போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஏராளமான ஆட்டோக்கள் செல்வது தெரிந்தது. அதில் ஒரு ஆட்டோவில், கொலையான பெண் அணிந்திருந்த சல்வாருடன் ஒத்துப்போகும் பிங்க் நிற துப்பட்டா ஒன்று வெளியே பறப்பது பதிவாகி இருந்தது.

   

அந்த ஆட்டோவை பற்றிய தகவல்களை ஆராய்ந்ததில், கொலையாளியான ஆட்டோ டிரைவர் சந்திரபோல் சிங் (34) என்பதும், அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு மும்பைக்கு வந்துள்ளதும், தற்போது மதுராவில் இருப்பதும் தெரியவந்தது. விரைந்து செயல்பட்ட போலீசார் மதுராவுக்குச் சென்று சந்திரபோல் சிங்கை கைது செய்தனர். விசாரணையில், பணத் தகராறில் பெண்ணை கொலை செய்து உடலை வீசியதாக அவர் ஒப்புக்கொண்டார். பிங்க் நிற துப்பட்டாவைத் துப்பு துலக்கி, குற்றவாளியைக் கைது செய்த போலீசாருக்கு மும்பை கமிஷனர் தேவன் பாரதி பாராட்டு தெரிவித்தார்.