மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயிலில் பயணித்த இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரை, ரெயில் கால்சினி நகரம் அருகே வந்தபோது ஆளில்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை காவல் துறையினர் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் தனிமையில் இருப்பதை அறிந்து அக்கிரமத்தில் ஈடுபட்ட அந்த நபரிடமிருந்து தப்ப, அப்பெண் பலத்த சத்தமிட்டு அலறியுள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட பக்கத்து பெட்டியில் இருந்த ரெயில்வே பணியாளர்கள், உடனடியாக விழிப்படைந்து நிலைமையை உணர்ந்து செயல்பட்டனர்.
சமயோசிதமாகச் செயல்பட்ட ரெயில்வே பணியாளர்கள், உடனடியாக ரெயில்வே உதவி எண்ணை தொடர்பு கொண்டு அவசரத் தகவலை அளித்தனர். இதன் மூலம் அடுத்தடுத்த ரயில் நிலையப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, குற்றவாளி தப்பியோட முடியாமல் விரைவாகக் கைது செய்யப்பட்டார்.
