“கணவரை கொல்… இல்லன்னா நான் செத்து விடுவேன்…” கள்ளக்காதலனுடன் மனைவியின் பகீர் வாட்ஸ்அப் உரையாடல்… ரகசியத் தொடர்பை நேரில் பார்த்ததால் வந்த வினை… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஆவணி 8, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்வர் ராவ் என்பவரது மனைவி பவானி, கூரியர் நிறுவன ஊழியரான சைதுலு என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். கடந்த ஜூலை 27 அன்று தனது மனைவியை மற்றொரு நபருடன் தவறான முறையில் கண்ட ராஜேஷ்வர் ராவ், அதுகுறித்து பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளார். மறுநாள் கிராமத்திற்குச் சென்றபோது சைதுலு தன்னைத் பின் தொடர்ந்து வந்து கொல்ல முயன்றதால், சந்தேகமடைந்து மனைவியின் கைபேசியைப் பரிசோதித்துள்ளார். அதில், “என் கணவரை விபத்து போல நாடகமாடிக் கொன்றுவிடு, இல்லையென்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்று கள்ளக்காதலனுக்கு மனைவி அனுப்பிய வாட்ஸ்அப் உரையாடல்கள் சிக்கின.

மனைவி தன் மீது தீட்டிய கொலைத் திட்டத்தின் ஆதாரங்களான அந்தச் சாட்டிங் புகைப்படங்களைக் கைப்பற்றிய கணவர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கம்மம் ஊரகக் காவல்துறையினர், வாட்ஸ்அப் உரையாடல்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.