பாலிவுட்டில் பலத்த அடிவாங்கியும் திருந்தாத அட்லீ… திரும்பவும் பிரபல ஹிந்தி நடிகரை வைத்து படம் தயாரிக்க போறாராம்..!

By Soundarya on தை 10, 2025

Spread the love

ராஜா ராணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அடுத்தடுத்து விஜய் நடித்த தெறி, மெர்சல் , பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த நான்கு படங்களுமே கிட் அடித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்ற அட்லி அங்கு முதல் படமே ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் நயன்தாராவும் நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி வசூல் சாதனை செய்தது .

   

இதனை அடுத்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து படம் எடுக்க இருக்கிறாராம். இது தவிர அங்கு பட தயாரிப்பிலும் பிசியாக இருக்கிறார். அதன்படி பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் தயாரிப்பாளராக என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடித்தார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். கீர்த்தி சுரேஷ்  பாலிவுட்டில் நடித்த முதல் திரைப்படம் இதுதான்

   

 

இந்த திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் அன்று ரிலீஸ் ஆனது. இது விஜய் நடித்த தெறி படத்தின் ரீமேக். இந்த படம் படுதோல்வியை சந்தித்தது .சுமார் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 100 கோடி கூட வசூலிக்கவில்லை. இதனால் அட்லிக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் பட தயாரிப்பை கைவிட இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னுடைய அடுத்த படத் தயாரிப்பை விரைவில் அறிவிக்க உள்ளாராம். பேபி ஜான் படம் பலத்த அடி வாங்கியதால் சாஹித் கபூர் நடிக்கும் படத்தை ரீமேக் படமாக இல்லாமல் நல்ல கதை அம்சம் கொண்ட படமாக எடுக்க அட்லீத் திட்டமிட்டுள்ளாராம்.