ராம் சரணுக்கு மட்டும் இத்தனை கோடியா..? Game Changer படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் சம்பள விவரம்..!

By Soundarya on ஜனவரி 10, 2025

Spread the love

இந்தியன் 3, ராம் சரணை வைத்து Game Changer ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் ஷங்கர். இதில் கேம் சேஞ்சர்  திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். கேம் சேஞ்சர் படத்தை சுமார் 450 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தில்ராஜு தயாரித்துள்ளார். படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல் காட்சிகளுக்கு மட்டும் படமாக 90 கோடி செலவழித்துள்ளனர்.

   

இந்த படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  ராம் நந்தன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராம்சரண் தனது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு மாவட்ட ஆட்சியராக வருகிறார். நேர்மையாக இருக்கும் இவர் அதிரடி ஆக்சன் களை மேற்கொள்ளும் நிலையில் இதில் அமைச்சராக நடித்துள்ள SJ சூர்யாவுக்கு இது பிடிக்கவில்லை.

   

 

இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டமும் இறுதியாக ராம் நந்தன் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் ட்விஸ்ட்.  இந்நிலையில் படத்தில் நடித்த நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,  இந்த படத்தில் நடிகர் ராம்சரண் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகர் ராம்சரண் 65 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம். மற்ற படங்களுக்கு 100 கோடி வேலை சம்பளம் வாங்கும் ராம்சரண் இந்த படத்துக்காக தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டாராம். இயக்குனர் சங்கர் மற்ற படங்களுக்கு 50 கோடி வரை வாங்கும் நிலையில் கேம் சேஞ்சர் படத்துக்காக 35 கோடி தான் வாங்கியுள்ளாராம். நடிகை கியாரா அத்வானி இந்த படத்துக்காக 7 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.