ஜவானில் சம்பாரித்த பணத்தை வைத்து கடை ஆரம்பிக்கும் அட்லீ.. கல்லாகட்ட உதவுவாரா பவானி..??

By Priya Ram on ஏப்ரல் 3, 2024

Spread the love

இயக்குனர் அட்லி ராஜா ராணி படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு விஜயின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.இதனையடுத்து ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.

   

நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் நடித்த ஜவான் படம் ஹிந்தி சினிமாவில் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. மேலும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது அல்லு அர்ஜுனன் வைத்து அட்லீ அடுத்ததாக ஒரு படத்தை இயக்க உள்ளாராம்.

   

 

இந்த நிலையில் அட்லீ தனது ஏ பார் ஆப்பிள் நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி தரணிதரன். அடுத்ததாக பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்தை அட்லீ தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அட்லீ சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

actor vijay sethupathi