பிரபல நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் பிரபுதேவா பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் மலையாளத்தில் அனுஷ்கா அறிமுகமாகும் கத்தனார் படத்திலும் பிரபுதேவா நடிக்க உள்ளார்.
அந்த படத்தில் ராஜா கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. திகில் படமான கத்தனாரில் ஜெயசூர்யா அனுஷ்கா இணைந்து நடிக்க உள்ளனர். இதனை ரோஜின் தாமஸ் இயக்குகிறார். அமானுஷ்ய சக்திகள் தொடர்பான கற்பனை திரைப்படமாக கத்தனார் உருவாகிறது.
இதற்கு ராகுல் இசையமைக்கிறார். கடைசியாக சந்தோஷ் சிவன் இயக்கிய உறுமி படத்திற்கு பிறகு பிரபு தேவா மலையாள சினிமா படத்தில் நடிக்கிறார். அந்த படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகிறது. கத்தனார் படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்தனார் படத்தில் பிரபுதேவாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் இணைந்து பணியாற்ற இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.
View this post on Instagram