தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் அட்லீ. ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட் திரை உலகிற்கு நுழைந்த இவர் தற்போது அல்லு அர்ஜுனனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இது தொடர்பான அப்டேட் நேற்று வெளியானது. தமிழ் சினிமாவில் வெகு சில படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் வெகுவிரைவில் டாப் இயக்குனராக அட்லி மாறிவிட்டார். பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் எந்திரன் மற்றும் நண்பன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ராஜா ராணி திரைப்படம் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமானார். காதல் கதை மூலமாக ரசிகர்களை முதலில் கவர்ந்த அட்லி அடுத்து கமர்சியல் படங்களை கொடுத்தார்.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து விஜய் வைத்தே தெறி, மெர்சல் மற்றும் பிக்கில் என மூன்று படங்களை தொடர்ந்து இயக்கி ஹிட் கொடுத்த இவர் ஷாருக்கான் குறிவைத்து பாலிவுட்டில் களம் இறங்கி ஜவான் படம் மூலமாக மாபெரும் வெற்றியை கொடுத்தார். இந்த படம் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்படியான நிலையில் தற்போது புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் உடன் அட்லி இணைந்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பும் நேற்று வெளியானது.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கின்றார். இது அல்லு அர்ஜுனின் 22 ஆவது திரைப்படமும் அட்லியின் ஆறாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை எடுக்க உள்ளனர். அதாவது படத்திற்கு 600 கோடி பட்ஜெட் என கூறப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் இப்படத்தில் நடிப்பதற்கு அட்லி முதலில் 55 கோடி சம்பளமும் அல்லு அர்ஜுன் 200 கோடி சம்பளமும் பேசியது மட்டுமல்லாமல் படத்தில் வரும் லாபத்திலும் ஷேர் கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கெல்லாம் ஒப்புக் கொள்ளாத சன் பிக்சர்ஸ் நிறுவனம் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் என இருவருக்கும் சரி பாதியாக தலா 110 கோடி சம்பளம் கொடுக்க முடிவு செய்துள்ளது. பான் இந்தியா ஸ்டார் ஆக வளம் வந்து கொண்டிருக்கும் அல்லு அர்ஜுன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தன்னுடைய சம்பளத்தை மிகவும் குறைத்துக் கொண்டு ஒப்புக்கொண்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.