இந்திய சினிமாவில் இதுவரை எந்த ஒரு நடிகரும் செய்யாததை செய்த சல்மான்கான்.. தல நீங்க உண்மையிலேயே கிரேட் தான்..!

By Nanthini on சித்திரை 9, 2025

Spread the love

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவான சிக்கந்தர் திரைப்படம் கடந்த மார்ச் 30ம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படத்தில் சல்மான் கான் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் படம் படு தோல்வியை சந்தித்தது. சுமார் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது வரை வெறும் 160 கோடிகள் மட்டுமே வசூல் செய்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்! ராஷ்மிகாவை தொடர்ந்து இணையும்  முன்னணி நடிகை! | Tamil Cinema News

   

இதனால் படக்குழுவினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இப்படியான நிலையில் இந்திய சினிமாவில் இதுவரை எந்த ஒரு நடிகரும் செய்யாத ஒரு செயலை சல்மான் கான் செய்துள்ளார். அதாவது இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்த நிலையில் நடிகர் சல்மான் கான் படத்தைப் பார்த்த பல ரசிகர்களை அழைத்து ஒரு சந்திப்பு நடத்தியுள்ளார். அந்த சந்திப்பில் இந்த படம் எதனால் மக்களுக்கு பிடிக்கவில்லை, படத்தில் என்னென்ன குறைகள் இருந்தன என்று கருத்து கேட்டுள்ளாராம். தன்னிடம் உள்ள குறைகளை திருத்திக் கொள்வதற்காக எந்த ஒரு நடிகரும் செய்யாத செயலை சல்மான் கான் செய்துள்ளார்.

   

பாப்புலர் ஆகவேண்டுமென சல்மான்கானை மிரட்டிய ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிவரும்  'சிகந்தர்' படத்தின் பாடலாசிரியர்

 

ரசிகர்களிடமிருந்து வரும் கருத்துக்களை கேட்டு அடுத்த படத்தில் இது போன்று நடக்காதவாறு பார்த்துக் கொள்ளலாம் என்பதற்காகத்தான் சல்மான் கான் இவ்வாறு செய்துள்ளார். அதேசமயம் ஏ ஆர் முருகதாஸ் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள நிலையில் சிக்கந்தர் படத்தை பார்த்து ரசிகர்கள் இதை ஏ ஆர் முருகதாஸ் படம் தானா என்று கேட்கும் அளவுக்கு படுமோசமாக இருந்துள்ளது. ஒருவேளை சில கட்டாயங்களால் ஏ ஆர் முருகதாஸ் சீக்கிரத்தில் இந்த படத்தை எடுத்து முடித்ததால் இவ்வாறு இருந்திருக்கலாம் எனவும் ஒரு பக்கம் கூறி வருகிறார்கள். தற்போது ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து மதராசி திரைப்படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.