கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான மீனாட்சி குங்குமம் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தான் ராமராஜன். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தெரு விளக்கு, சிவப்பு மல்லி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு 1956 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற திரைப்படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் ராமராஜன் ஹீரோவாக நடித்தார்.
ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக வெற்றி படங்களை கொடுத்த ராமராஜனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது கரகாட்டக்காரன் திரைப்படம் தான். கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை காமராஜரின் முதல் படத்திற்கு இசையமைத்திருந்த கங்கை அமரன் இயக்கியிருந்தார். இரண்டு ஊரில் இருக்கும் கரகாட்டக்காரர் கோஷ்டிகளுக்கு நடுவில் நடைபெறும் மோதலும் காதலும் கடந்த இந்த திரைப்படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் கூட்டணியில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் படத்தை தூக்கி நிறுத்தியது.
இதில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில் அவரும் இந்த திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இவர்களைத் தவிர வாகை சந்திரசேகர், சந்தான பாரதி, சண்முகசுந்தரம், கோவை சரளா, கவுண்டமணி மற்றும் செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற பாட்டாலே புத்தி சொன்னா என்ற பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் கங்கை அமரன் தான் எழுதியிருந்தார்.
பாடலுக்காகவும் காமெடி காட்சிகளுக்காகவும் பெரிய வெற்றி பெற்ற இந்த படம் தான் இளையராஜா கதை கேட்காமல் இசையமைத்த திரைப்படமாகும். இந்த படத்தின் கதையை யோசிக்க இயக்குனர் கங்கை அமரன் எதற்காக இசையமைக்க இளையராஜாவிடம் கேட்டுள்ளார். உடனே இளையராஜா கதை எதுவும் தேவையில்லை என்ன மாதிரியான பாடல் வேண்டும் என்று கேட்டுவிட்டு அவர் சொன்ன சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனைத்து பாடல்களையும் அமைத்து கொடுத்துள்ளார். கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கதை கேட்காமலேயே இளையராஜா அமைத்துக் கொடுத்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இந்த தகவலை கங்கை அமரனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.