ஒன்னா ரெண்டா டெஸ்ட் படத்தை தொடர்ந்து ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கும் நயன்தாராவின் படங்கள்.. லிஸ்ட்டை பார்த்தாலே தல சுத்துதே..!

By Nanthini on சித்திரை 8, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் எனவும் தன்னுடைய பெயரை சொல்லி அழைப்பதே தனக்கு மகிழ்ச்சி எனவும் தெரிவித்திருந்தார். இவர் இறுதியாக அன்னபூரணி திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் சமீபத்தில் டெஸ்ட் என்ற வெப் தொடர் வெளியாகி இருந்தது. மாதவன் மற்றும் சித்தார்த்தாகியோர் நடித்திருந்த இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகியுள்ள படங்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

நயன்தாராவின் மண்ணாங்கட்டி படப்பிடிப்பு தொடங்கியது.

   

மண்ணாங்கட்டி:

   

ட்யூட் விக்கி இயக்கத்தில் உருவாகியுள்ள மண்ணாங்கட்டி சின்ஸ் 1960. பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் புகழ் விக்கி இயக்கும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாராவை தவிர யோகி பாபு, தேவதர்ஷினி மற்றும் கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

 

Lady Superstar Nayanthara commences shooting for this new movie! - Official  update - Tamil News - IndiaGlitz.com

டியர் ஸ்டூடண்ட்ஸ்!

அடுத்ததாக நயன்தாரா மற்றும் நிவின் பாலி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டியர் ஸ்டூடண்ட்ஸ். இந்தத் திரைப்படத்தை சந்திக்குமார் மற்றும் ஜார்ஜ் பிலிர் ரே ஆகியோர் இயக்கியுள்ள நிலையில் படப்பிடிப்பு எல்லாம் நிறைவடைந்து பிலிஸ் காண பணிகள் நடைபெற்று வருகிறது.

Nayanthara has been cast in Yash, Geetu Mohandas' Toxic, confirms Akshay  Oberoi - Hindustan Times

டாக்ஸிக்:

டாக்ஸிக் என்ற கன்னட திரைப்படத்தில் நடிகர் யார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவும் நடித்துள்ளார். இந்த படம் ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் படமாக்கப்பட உள்ளது. பல சர்வதேச மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது.

RAKKAYIE - Title Teaser | Nayanthara | Senthil Nallasamy | Govind Vasantha

ராக்காயி:

இயக்குனர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் தான் ராக்காயி. இந்தத் திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இந்த படத்தில் நயன்தாரா வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நீண்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Click Bits: நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' பட பூஜை! | Click Bits: Mookuthi  Amman 2 Movie Shooting Start Today - hindutamil.in

மூக்குத்தி அம்மன் 2 :

சுந்தர் சி இயக்கத்தில் உருவாக உள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

இந்த படங்களை தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் தன்னுடைய 81வது திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். அதன் பிறகு மம்முட்டி படம், தனி ஒருவன் 2 மற்றும் கவின் படம் என வரிசையாக நயன்தாரா நடிப்பில் பல திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.