திரைத்துறையில் உச்சம் தொட்டு, அரசியலில் தடம் பதித்த உடனேயே தமிழக மக்களால் அரியணையில் அமர வைக்கப்பட்டவர் முதலமைச்சர் விஜய். 60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சி அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்த இவரது வெற்றி, அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தனது முதல் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை விடவும் கூடுதலான வாக்குகளைப் பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனால், அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதுமே அவருக்கு வந்த முதல் பெரிய நெருக்கடி மக்கள் பிரச்சினைகளால் அல்ல, மாறாக ஒரு ஜோதிடரால் தான் என்பது தான் தற்போதைய அரசியல் விவாதம்.
விஜய் முதலமைச்சரானதும், அவரது ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி பண்டிட் என்பவருக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டது தான் அவர் மீதான முதல் விமர்சனமாக உருவெடுத்தது. ஒரு ஜோதிடருக்கு அரசுப் பணி ஏன் கொடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர். சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளன்றே, எதிர்க்கட்சி வரிசையில் இருந்து குரல் எழுப்பிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த், “ஒரு ஜோதிடரை அரசு பதவியில் அமர வைத்ததன் மூலம் இந்த நாட்டு இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” என்று விஜய்யை நோக்கி நேரடியாகக் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததால், கடும் எதிர்ப்புக்குப் பணிந்து ரிக்கி பண்டிட்டுக்கு வழங்கப்பட்ட அரசுப் பதவி உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.
இந்தச் சர்ச்சை ஓரளவிற்கு ஓய்ந்திருந்த நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை முதல்வர் விஜய் நேரில் சந்தித்துப் பேசினார். தமிழகத்தின் முக்கிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிப்பதற்காகச் சென்ற இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தில், மீண்டும் ஜோதிடர் ரிக்கி பண்டிட் இடம் பெற்றிருப்பது புதிய புயலைக் கிளப்பியுள்ளது. பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் அலுவலகங்களுக்கு விஜய் சென்றபோது, அவரது காரிலேயே ரிக்கி பண்டிட்டும் பயணித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய்யுடன் அவரது நண்பர் ஜெகதீசன், தனிப்பட்ட பாதுகாவலர் நயம் மூஷா மற்றும் ஓட்டுநர் ஆகியோர் டெல்லி சென்றதில் எந்தத் தவறும் இல்லை; அது இயல்பான ஒன்றுதான். ஆனால், அரசு முறைப் பயணமாக நாட்டின் பிரதமரையும், நிதியமைச்சரையும் சந்திக்கச் செல்லும்போது, ஒரு ஜோதிடரைத் தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று அரசியல் விமர்சகர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பகுத்தறிவு பேசும் தமிழக மண்ணில், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஜோதிட நம்பிக்கைகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது சரியா என்ற விவாதமும் தற்போது தீவிரமடைந்துள்ளது.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…