யார் இந்த அஸ்வினி?… நைட்டியுடன் கார் கழுவும் வீடியோ போட்டால் மாசம் 1.2 கோடியா?… வாயடைத்துப்போன இணையதளம்..!!!

By Rajeshwari on சித்திரை 7, 2026

Spread the love

கேரளாவைச் சேர்ந்த சமூக வலைதளப் பிரபலம் அஸ்வினி அஷ் தற்போது இணையதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளார். இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் சப்ஸ்க்ரிப்ஷன் முறை மூலம் பிரத்யேகப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து வரும் இவர், அதன் வாயிலாக மாதம் சுமார் 1.2 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாக வெளியாகி உள்ள தகவல் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் சமீபத்தில் தெலுங்கு பிக் பாஸ் பிரபலம் விஷ்ணுப்பிரியா இது போன்ற தளங்கள் மூலம் அதிக வருமானம் ஈட்டுவதாகப் பேசப்பட்ட நிலையில், தற்போது அஸ்வினி அவரை விடவும் அதிக வருவாய் ஈட்டி இந்தியாவிலேயே அதிக சம்பாதிக்கும் இன்ஃப்ளூயன்சர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார்.

   

இதனால் அஸ்வினியின் இந்த அசாத்திய வருமானத்திற்குப் பின்னால் ஒரு பெரிய சந்தாதாரர் பட்டாளமே உள்ளது. சுமார் 25 ஆயிரம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள இவர், ஒருவரிடம் தலா 400 ரூபாய் வரை கட்டணமாகப் பெற்றுத் தனது பிரத்யேக உள்ளடக்கங்களை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

   

இந்நிலையில் இவரைப் போன்றே தர்ஷா குப்தா, அபிராமி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் தற்போது சப்ஸ்க்ரிப்ஷன் தளங்களுக்குத் திரும்பி வரும் நிலையில், கடின உழைப்பு இன்றி கவர்ச்சியான வீடியோக்கள் மூலம் மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையைச் சம்பாதிப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.