“இவ்வளவு காலம் திமுகவை மிஸ் பண்ணிட்டோம்” கேப்டனுக்கு கருணாநிதி கொடுத்த ஸ்பெஷல் மரியாதை… 5 நிமிட ரகசியத்தை உடைத்த பிரேமலதா..!!

By Soundarya on சித்திரை 7, 2026

Spread the love

மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் (கேப்டன்) மீது மிகுந்த பாசம் இருந்ததாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அவரைச் சந்திக்க நேரம் கேட்ட அடுத்த ஐந்தாவது நிமிடமே ‘வா’ என்று அழைப்பு வரும் என அவர் பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

இவ்வளவு காலம் தவறான கூட்டணியில் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், கருணாநிதி மற்றும் விஜயகாந்தின் ஆசிர்வாதத்தால் தற்போது (திமுகவுடன்) நல்ல கூட்டணி அமைந்துள்ளதாகக் கூறியுள்ளார். ஏன் முன்னரே திமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்று இப்போது வருந்துவதாகவும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.