#image_title
பிரபல நடிகரான அரவிந்த்சாமி தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தின் மூலம் அரவிந்த்சாமி தனது திரை பயணத்தை ஆரம்பித்தார்.
ரோஜா, பம்பாய், இந்திரா, மின்சார கனவு, அலைபாயுதே உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இதில் ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் அரவிந்த்சாமிக்கு மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்று தந்தது. இன்று நடிகர்களின் சாமி தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரவிந்த்சாமி பல சுவாரசியமான அனுபவம் குறித்து நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
அதாவது தளபதி படத்தின் ஷூட்டிங் நடந்த போது அரவிந்த்சாமி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று விட்டார். மிகவும் களைப்பாக இருந்ததால் அங்கிருக்கும் ஒரு அறையில் இருந்த மெத்தையில் அரவிந்த்சாமி படுத்த தூங்கிவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து அரவிந்த்சாமி எழுந்து பார்த்தபோது தான் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக ஒதுக்கப்பட்ட அறை என்பது தெரியவந்தது.
அந்த அறையின் தரையில் ஒருவர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அது வேறு யாருமில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அதன் பிறகு தான் இவ்வளவு நேரம் ஓய்வெடுத்தது சூப்பர் ஸ்டாரின் அறை என்பது அரவிந்த்சாமிக்கு தெரியவந்தது. அவரை எழுப்பாமல் கோபமும் படாமல் ரஜினிகாந்த் தரையில் படுத்து தூங்கியுள்ளார். இதனை தன் வாழ்வில் மறக்கவே மாட்டேன் எனவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி அரவிந்த்சாமி பெருமையாக பேசி உள்ளார்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…