அரவிந்த் சாமியை ஒரு நடிகராக தெரியும். ஆனால் பிசினஸ் மேனாக உங்களுக்கு தெரியுமா? அரவிந்த்சாமி பற்றிய அறியாத விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். முதன்முதலாக மணிரத்தினம் இயக்கிய தளபதி என்கிற மாஸ்டர் பீஸ் திரைப்படத்தின் மூலம் அரவிந்த்சாமி திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு 20 வயது தான். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ரோஜா திரைப்படத்தின் மூலம் அரவிந்த்சாமி ஹீரோவாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அரவிந்த்சாமி மாதிரி தான் மாப்பிள்ளை வேண்டும் என்ற சொல்லும் அளவிற்கு அந்த காலத்தில் அவர் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார்.
இதனை அடுத்து பாசமலர்கள், தாலாட்டு, பாம்பே, மின்சார கனவு, என் சுவாச காற்றே உள்ளிட்ட வெற்றி படங்களில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். கடந்த 2000-ஆம் ஆண்டு அரவிந்த்சாமி சினிமாவை விட்டு விலகினார். அதன் பிறகு தனது தந்தை வீட்டில் வி.டி சுவாமி அண்ட் கம்பெனியை கவனித்து வந்தார். கடந்த 2005ஆம் ஆண்டு சுவாமி டேலண்ட் மேக்சிமம் என்கிற நிறுவனத்தை தொடங்கி தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். சில மாதங்களிலேயே கார் விபத்தில் அரவிந்த்சாமி படுகாயம் அடைந்தார்.
அவரது காலின் ஒரு பகுதி செயல் இழந்தது. அதன் பிறகு படுத்த படுக்கையான அளவில் சாமியின் உடல் எடை அதிகரித்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார். பின்னர் பழையபடி மீண்டு வந்து கடந்த 2013-ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அரவிந்த்சாமிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் திரைப்படம். அந்த திரைப்படத்தில் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் மீண்டும் தனக்கென இடத்தை தக்க வைத்தார்.
அரவிந்த்சாமி கடந்த 2021-ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் தலைவி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் அச்சு அசலாக எம்ஜிஆர் போலவே அரவிந்த்சாமி நடித்துள்ளார். அவரது கெட்டப்பும் நடிப்பும் எம்ஜிஆரை மக்கள் கண்ணெதிரே கொண்டு வந்தது. இப்போது அரவிந்த்சாமி கார்த்தி உடன் இணைந்து மெய்யழகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. முழு நேரமாக சினிமாவை காட்டிலும் பிசினசை தான் அரவிந்த்சாமி பெரிதும் விரும்புவாராம். அவர் பிசினஸில் கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார். பிசினஸில் இருந்து பிரேக் எடுத்து அவ்வபோது சினிமாவில் நடித்து வருகிறார். இவரது டேலண்ட் மேக்ஸிமம் நிறுவனத்தின் ஆண்டு வருமானமே பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.