பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக மழை பிடிக்காத மனிதன் படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் வானம் கொட்டட்டும், படைவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தனா. இவரது இயக்கத்தில் உருவான ஹிட்லர் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இன்று திரையரங்குகளில் ஹிட்லர் படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் ரியா சுமன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சரண்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மெர்வின் விவேக் இசை அமைத்துள்ளனர். இந்த திரைப்படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் பிரஸ்மீட்டில் நிகழ்ச்சியை பேசிய விஜய் ஆண்டனி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, அரசியல்ல அங்கங்க நிறைய விஷயம் நடக்கும். ஆனா யாரையும் குறிப்பிட்டு பேசுறதுக்காக இந்த படத்தை எடுக்கல. முழுக்க முழுக்க ஜனரஞ்சிதமான ஒரு படம். எந்த குறிப்பிட்ட கட்சியையும் சார்ந்தது இல்லை. படத்துல குடிக்கிறதுக்கு சப்போர்ட் பண்ணல. நடக்கிறத காட்டுறாங்க அவ்வளவுதான்.
கண்டிப்பா குடி அப்படிங்கிற பழக்கம் எந்த குடும்பத்தையும் பாதிக்கும். நல்லவன திடீர்னு கெட்டவனா மாத்திடும். எங்கேயோ ஒளிஞ்சிட்டு இருக்கிற மிருகம் வெளிய வந்துரும். கண்டிப்பா குடி அப்படிங்கறது வரவேற்கத்தக்க விஷயம் இல்ல. இதனால பல குடும்பங்கள் பாதிக்கப்படுது. நிறைய பேர் கஷ்டப்படுறாங்க. எல்லாமே உண்மைதான். ஆனால் சினிமா எடுக்கும்போது அப்படி ஒரு சீன் வந்தா அத கடந்து தான் போக வேண்டியதா இருக்கு. அதை பண்ணக்கூடாது என்று நினைத்தோம்னா நிறைய விஷயங்கள் படத்தில் இருக்காது.
வில்லன்னு ஒருத்தன காமிச்சாதான் ஹீரோவா காட்ட முடியும். வில்லனா காட்டும் போது அவன் நிறைய தப்புகள் செய்ற மாதிரி காட்டித்தான் ஆகணும். ஆனா கீழ குடி குடியை கெடுக்கும், கேடு விளைவிக்கும் அப்படின்னு லைன்ஸ் போட்டுருவாங்க. நான் தைரியமா இப்போ சொல்லுவேன். உங்க எல்லாருக்கும் சேர்த்து சொல்லுறேன். யாருமே குடிக்காதீங்க. குடி அப்படிங்கறது நல்லது கிடையாது. நானே குடிக்கிறதை விட்டுட்டேன். இப்போ ரீசண்டா தான் குடிக்கிறதை விட்டுட்டேன். இந்த கதைக்கு தேவைப்பட்டுச்சுன்னு டைரக்டர் மீசையை கம்மியா வச்சுட்டாரு. அடுத்து அருண் பிரபு புருஷோத்தமன் படம் போய்கிட்டு இருக்கு. அந்த படத்துல மீசை வச்சிருப்பேன் என ஜாலியாக பேசி உள்ளார்.