கணவன் மனைவி உறவு என்பது மிகவும் புனிதமானது. நீண்ட நாட்கள் வரக்கூடியது. மற்ற எந்த உறவுகளும் ஒரு சில காலகட்டத்தில் ஒரு மனிதனை விட்டு பிரிந்து சென்றாலும் கணவன் மனைவி உறவு மட்டும் இறுதி வரையிலும் சேர்ந்தே வரும். அப்படி கணவன் மனைவிக்காகவும் மனைவி கணவனுக்காகவும் விட்டுக் கொடுத்து செல்வது தான் வாழ்க்கை.
அன்றைய காலகட்டத்தில் புரிதலில் தான் கணவன் மனைவி வாழ்க்கை சென்று இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் புரிதலோடு இணைந்து சர்ப்ரைஸ்கள் பரிசுகள் என மெருகேற்றிக் கொண்டார்கள். அதன்படி ஒரு நபர் தனது மனைவிக்காக 400 கோடி ரூபாய் செலவழித்து மிகப்பெரிய பரிசை வாங்கி கொடுத்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஜமால் அல் நடக். இவர் மிகவும் கோடீஸ்வரர் ஆவார். இவரது மனைவி சவுதி அல் நடக் ஆவார். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த சவுதி அல் நடக் துபாயில் படித்துக் கொண்டிருக்கும் போது ஜமால் அல்நடக்கை சந்தித்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் ஆகி தற்போது மூன்று ஆண்டுகள் ஆனாலும் ஜமால் அல் நடக் தனது மனைவியை மீது மிகுந்த அன்பு கொண்டிருந்திருக்கிறார். அவருக்காக ஏராளமான பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார். இந்நிலையில் தனது மனைவி நீச்சல் உடையில் குளிப்பதற்காக ஆசைப்பட்டதனால் ஒரு தனித்தீவையே விலைக்கு வாங்கி இருக்கிறார் ஜமால் அல் நடக்.
பிகினி அணிந்து குளிக்கும்போது அவருக்கு அசவுரியம் ஏற்படாமல் இருப்பதற்காக 418 கோடி ரூபாய் செலவு செய்து தனி தீவையே வாங்கி இருக்கிறார் ஜமால். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சவுதி அல்அடக் தனது கணவன் தனக்கு அளித்த பரிசை வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார். இது 24 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது. மனைவிக்காக லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் செலவு செய்யும் ஜமால் அல் நடக்கை பார்த்து நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.