விஜய் எப்படி ஊழல் செய்தார் என சொல்ல முடியும்… EPS-ஐ பார்த்தா பரிதாபமா இருக்கு… ஒரே போடாக போட்ட தவெக அருண்ராஜ்..!!

By Soundarya on மாசி 9, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநிலப் பொருளாளர் அருண்ராஜ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் திருச்சியில் இன்று (பிப்.9) காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய்யை ஊழல்வாதி என்று இபிஎஸ் விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “விஜய் இதுவரை எந்தவொரு அரசுப் பதவியிலும் இருந்ததில்லை; அப்படி இருக்கையில் அவர் எப்படி ஊழல் செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சராக இருந்த ஒருவருக்கு இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியவில்லையா என்றும் அவர் சாடியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய அரசியல் நிலையைப் பார்த்தால் தமக்கு மிகவும் பரிதாபமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னணி நடிகராக இருந்து மக்கள் பணிக்காக வந்திருக்கும் விஜய்யைப் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இபிஎஸ் கூறி வருவதாகவும், இது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது என்றும் அருண்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.