Categories: சினிமா

வித்தியாசமான முறையில் “வணங்கான்” பட ப்ரமோஷனில் ஈடுபட்ட அருண் விஜய்.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

பாலா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் வார். ஆரம்பத்தில் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 1999 ஆம் ஆண்டு “சேது” திரைப்படத்தை இயக்கியதான் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை போன்ற திரைப்படங்களை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றது மற்றும் தமிழ்நாடு மற்றும் தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. அதன் மூலம் பிரபலமானார் பாலா.

பாலாவின் படங்கள் எதார்த்தமாகவும் எளிமையாகவும் ஆழமான கருத்துக்களை கூறுவதாகவும் இருக்கும். அதே போல் மக்கள் மனதை கலங்கடிக்கும் வகையில் இருக்கும். அப்படிப்பட்ட கதைகளை தான் அவர் தேர்ந்தெடுத்து இயக்குவார். எந்த நடிகரும் பாலாவின் இயக்கத்தில் நடித்து விட்டால் அது திருப்புமுனையாக இருக்கும் என்று கூறுவர். அப்படி தற்போது பாலா அருண் விஜயை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் “வணங்கான்“. இந்த திரைப்படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, ஜான் விஜய், மிஸ்கின், ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் மற்றும் சாம் சி எஸ் ஆகியோர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் முதலில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் அதன் பிறகு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் விலகியதை தொடர்ந்து அருண் விஜய் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை எடுத்துள்ள நிலையில் தற்போது படக்குழுவினர் பிரமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அருண் விஜய் இதுவரை எந்த ஒரு நடிகரும் செய்யாத அளவுக்கு வித்தியாசமான முறையில் படத்தின் ப்ரோமோஷனில் ஈடுபட்டுள்ளார். அதாவது பொதுவெளியில் இறங்கி மக்களோடு மக்களாக உரையாடி படத்தை பிரமோஷன் செய்துள்ளார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

6 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

6 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

6 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

6 மணத்தியாலங்கள் ago