தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள அருண் விஜய் தற்போது பாலாவின் இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் பல போராட்டங்களுக்கு பிறகு தான் இந்த இடத்தை அடைந்துள்ளார். 90களில் தமிழ் சினிமாவில் அறிமுகமான அருண் விஜய்க்கு அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க சுமார் 20 வருடங்கள் ஆனது. இந்த 20 வருடங்களும் தன் விடாமுயற்சியை கைவிடாமல் அவர் தொடர்ந்து போராடி வந்தார். அந்தப் போராட்டத்திற்காக பயனை தான் தற்போது அருண் விஜய் அனுபவித்து வருகின்றார். கடந்த 2015 ஆம் ஆண்டு கௌதமேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் அவருக்கு சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதனை தொடர்ந்து குற்றம் 23, தடம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது தனுசுடன் இணைந்து இட்லி கடை மற்றும் ரெட்டை தல போன்ற பல படங்களில் நடித்து வரும் அருண் விஜயின் நடிப்பில் அடுத்ததாக வணங்கான் திரைப்படம் வெளியாக உள்ளது. பாலா மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதேபோல அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் வெளியாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளி போனது.
இப்படியான நிலையில் அருண் விஜய் சமீபத்தில் அளித்த பேட்டியில், விடாமுயற்சி திரைப்படத்துடன் என் படமும் வெளியாகிறது என்பது மகிழ்ந்திருமேனிக்கு மகிழ்ச்சியாக தான் இருந்தது. ஆனால் பொங்கலுக்கு விடாமுயற்சி வெளியாகாதது என்பதை எனக்கு வருத்தம். சில மாதங்களுக்கு முன்பு அஜித் சாரை நான் சந்தித்தேன். அப்போது நான் பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக கூறினேன். அப்போதுதான் வணங்கான் படத்தில் நான் கமிட்டானேன். நான் பாலாவின் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் அஜித் அவருடைய மனைவி ஷாலினியை அழைத்து அருண் பாலா படத்தில் நடிக்க போகிறார் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
அன்னைக்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நான் நடித்த ஒவ்வொரு படமும் எனக்கு ஒவ்வொரு அனுபவத்தை கொடுத்தது. குறிப்பாக மகிழ்திருமேனி இயக்கத்தில் தடையற தாக்க திரைப்படத்தில் நடித்த பிறகுதான் என்னையே நான் உணர்ந்து கொண்டேன். அந்தப் படத்தில் நடித்த பிறகுதான் கௌதம் மேனன் சார் கண்ணில் நான் பட்டேன். என்னை அறிந்தால் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நான் சரியாக இருப்பேன் என்று அவருக்கு தோன்றியது. அப்படித்தான் அப்படத்தின் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று அருண் விஜய் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.