தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து ஒரு சில படங்களில் துணை கேரக்டரில் நடித்து வந்தவர்தான் ராமராஜன். 1978 ஆம் ஆண்டு வெளியான மீனாட்சி குங்குமம் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான ராமராஜன் அடுத்து தெருவிளக்கு, சிவப்பு மல்லி மற்றும் சிவாஜி நடித்த சூரக்கோட்டை சிங்கக்குட்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் 1986 ஆம் ஆண்டு வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு என்ற திரைப்படம் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார். இந்த திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. வி. அழகப்பா நீக்கிய இந்த திரைப்படத்தில் ராமராஜனுடன் ரேகா, சுலக்சனா, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எங்க ஊரு பாட்டுக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், நம்ம ஊரு மாப்பிள்ளை, எங்க ஊரு காவல்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் என தான் நடித்த பெரும்பாலான திரைப்படங்களை கிராமத்து பின்னணியில் இருக்கும் வகையில் ராமராஜன் நடித்திருந்தார். அதனைப் போலவே அம்மன் கோவில் வாசலிலே, நம்ம ஊரு ராசா மற்றும் விவசாயி மகன் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை இயக்கியும் வெற்றி கண்டார். இப்படி தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்த ராமராஜன் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த மறுத்துள்ளார். அதாவது உதவி இயக்குனராக படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராமராஜனை கதாநாயகனாக மாற்றியவர் இயக்குனர் அழகப்பன்.
அவர் இயக்கிய நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தில் தான் ராமராஜன் நடிகராக அறிமுகமான நிலையில் இந்தப் படத்தில் வெற்றியை தொடர்ந்து அடுத்து ஒரு திரைப்படத்தை இயக்க அவர் முடிவு செய்து ராமராஜனுக்கு போன் செய்துள்ளார். காமராஜர் அடுத்து ரெடியாக இருங்கள், நாம் சிங்கப்பூர் போகிறோம், படத்தின் பெயர் பூமழை பொழிகிறது, ஹீரோயினியாக நதியா நடிக்கிறாங்க என்று சொன்னதும் ராமராஜன் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்ட நிலையில் படத்தில் விஜயகாந்த் நடிக்கிறார் என்று கூறியதும் என்ன சார், நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் நீங்களே என்னை நாயகனாக அறிமுகம் செய்துவிட்டு தற்போது இரண்டாவது ஹீரோவாக நடிக்க சொன்னால் எப்படி என்று ராமராஜன் கேட்டுள்ளார்.
இதனைக் கேட்ட இயக்குனர் நீ சொல்வது சரிதான் நான் வேறு யாரையாவது நடிக்க வைக்கிறேன் என்று கூறிவிட்டு பூமழை பொழிகிறது என்ற படத்தில் விஜயகாந்த் நதியாவுடன் ராமராஜன் நடிக்க வேண்டிய கேரக்டரில் நடிகர் சுரேஷ் நடிக்க வைத்தார். அதனைப் போலவே விஜயகாந்த் நடித்த சிவப்பு மல்லி என்ற திரைப்படத்தில் கூட ராமராஜன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.