தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அருள்நிதி. இவர் வம்சம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு.க தமிழரசின் மகனும் ஆவார். இவர் வம்சம், மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாவது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான டிமான்டி காலனி 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் முதல் பாகத்திலும் அருள்நிதி நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியான நிலையில் இதில் அருள்நிதி நடித்த ஸ்ரீனி கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது அருள்நிதி பம்பர் படத்தின் இயக்குனர் எம்.செல்வக்குமார் இயக்கத்திலும், தேன் திரைப்படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கத்திலும் புதிய படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.

இப்படியான நிலையில் தற்போது அருள்நிதி மற்றொரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதாவது கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் அருள்நிதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுடைய கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அருள்நிதி பாக்ஸராக நடிக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
