தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். இவர் வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே வேற லெவல் ஆல்பத்தை கொடுத்திருந்த இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராகவும் தற்போது மிக சிறந்த நடிகராகவும் உருவாகி இருக்கின்றார். மேலும் ஜிவி பிரகாஷ் குமார் ஏ ஆர் ரகுமானின் சகோதரியின் மகன்தான்.

சிறுவயதிலேயே ஏ ஆர் ரகுமான் இசையில் சில பாடல்களில் அவரது மழலை குரல் ஒலித்து இருக்கிறது. தற்போது முன்னணி இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.முதலில் இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடகராக அறிமுகமாகி அதன் பிறகு வெயில் என்ற திரைப்படத்தில் இசையமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். அதன்படி பொல்லாதவன், ஆனந்த தாண்டவம், அங்காடி தெரு, ராஜா ராணி, ஆடுகளம், சூரரைப் போற்று உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள தங்கலான் மற்றும் அமரன் திரைப்படத்திற்கும் இவர் இசையமைத்துள்ளார். மறுபக்கம் சினிமாவில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் ஜிவி பிரகாஷ் கலக்கி கொண்டிருக்கிறார். கடைசியாக அமரன், லக்கி பாஸ்கர் படங்களுக்கு இசையமைத்து செம ஹிட் ஆனது. இந்நிலையில் இவர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இவர் சினிமாவுக்கு வர்ரத்துக்கு முன்னாடி என்னென்ன விஷயங்களில் திறமையாக இருந்துள்ளார் என்றால், கோல்டு மெடலிஸ்ட், கிளாசிக் மியூசிக், ஹிந்துஸ்தானி படிச்சிருக்காராம். மியூசிக் 1000 ஸ்டேஜ்களில் வாசித்துள்ளாராம். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனு மாலிக் உள்ளிட்ட 6 மியூசிக் டைரக்டருடன் அசிஸ்டன்ட் மியூசிக் டைரக்டரா பண்ணியிருக்காராம். ப்ரோக்ராமராகவும் இருந்துள்ளார். அதன்பின்னர் விளம்பரம் பண்ண ஆரம்பித்து தான் படங்கள் பண்ண ஆரம்பித்துள்ளாராம். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
