பிரபல இயக்குனர் எஸ்.ஜே சூர்யா, வாலி, குஷி ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான படம் நியூ. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா ஒரு ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
இந்நிலையில் பெண் அதிகாரி ஒருவர் ஏகப்பட்ட அடல்ட் காட்சிகள் நிறைந்திருந்த அந்த படத்தை சென்சாரில் பார்த்தார். அவர் இந்த படத்திற்கு யு சான்றிதழும் இல்லை, யுஏ சான்றிதழும் இல்லை என கூறி இயக்குனரை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த இயக்குனர் தனது கையில் இருந்த செல்போனை அந்த பெண் அதிகாரி மீது தூக்கி எறிந்தார்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சூர்யாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனை தொடர்ந்து நியூ படத்தில் இடம்பெறும் எஸ்.ஜே சூர்யாவிற்கும் சிம்ரனுக்குமான நெருக்கமான காட்சிகளின் போஸ்டர்கள் சென்னையில் பல இடங்களில் ஓட்டப்பட்டது.
அவை தடை செய்யப்பட்ட காட்சிகளின் போஸ்டர் என்பதால் மீண்டும் எஸ்.ஜே சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்காகவும் அவர் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இப்படி ஒரு படத்திற்காக எஸ்.ஜே சூர்யா இரண்டு முறை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…