சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினை உடனடியாகக் கைது செய்தே தீர வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் மிக உறுதியாக இருந்ததாகப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் கைதைச் செயல்படுத்தினால் நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்ய முடியாது என்பதோடு, மாநிலம் முழுவதும் சட்டம் – ஒழுங்குப் பிரச்னைகள் தீவிரமடையக்கூடும் என்று காவல் உயர் அதிகாரிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், “எதிர்வரும் சவால்களைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம், முதலில் கைது நடவடிக்கையைச் செய்யுங்கள்” என முதலமைச்சர் உறுதியான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முதலமைச்சரின் இந்தத் தீர்க்கமான உத்தரவைத் தொடர்ந்துதான் அன்றைய தினம் காலையிலேயே அந்தப் பரபரப்பான கைது சம்பவம் அரங்கேறியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
