“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… இன்ஸ்டாவில் வலைவிரித்த போலி ஐடி… 16 வயது சிறுமியை கடத்தி கட்டிப்போட்டு கொடூரம்… நாக்பூரில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 7, 2026

Spread the love

மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நிர்பய் பாக்ரே என்ற வாலிபர், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் போலி கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் மூலம் 16 வயது சிறுமியிடம் நட்பு ஏற்படுத்தி, அவரை ஏமாற்றி பழகி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அச்சிறுமியை தனியாக சந்திக்க வரவழைத்த அந்த வாலிபர், அவரை கடத்திச் சென்றுள்ளார். சிறுமி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை தீவிரமாகத் தேடத் தொடங்கினர்.

   

காவல்துறையினர் சிறுமியின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தபோது, அவர் திக்ஹோரி பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள ஒரு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு விசாரித்ததில், வாலிபர் அவரை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.